sify sports
Home Astrology Business Classifieds Mobile Movies Samachar Shopping Sports Videos
Sify Home > Khel> ICC World Cup
Print Print Mail Mail
Sify Home >> khel >> Fullstory
நினைவுகளின் தடத்தில் - 28
வெங்கட் சாமிநாதன்
இல்லையெனில், போலீஸ் ஸ்டேஷனுக்குப் பின்னால் இருந்த பரந்த மைதானத்தில் மற்ற கைதிகளோடு, புதிதாக வந்த கைதி, எங்கள் மூன்றாம் கிளாஸ் வாத்தியார் ஜெயராஜையும் ஒரு போலீஸ்காரன் ஏதோ சொல்லி வேலை வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் என்பதை எப்படி கிளாஸில் இருந்த என் சினேகிதர்களுக்குச் சொல்லி அவர்களை வாய் பிளக்க வைக்கமுடியும்? வீடு வந்து மாமாவிடமும் சொன்னேன். அவர் முகம் வேதனையில் கருத்தது. பின்னால் என்னைக் கோபித்துக் கொண்டார் ."நீ ஏன்டா அங்கேல்லாம் சுத்தறே? பள்ளிக்கூடம் விட்டா நேரா வரமாட்டியா?" என்று. புதிதாகத் திறந்த தகரக் கடையிலும், இரும்புப் பட்டறையில் பார்த்த மாதிரியே ஒரு துருத்தியை வைத்துக் கொண்டு காற்றடித்துக்கொண்டிருந்தது எல்லாம் எப்படிப்பார்ப்பது?

மதுரையிலும் அதே கதைதான். காமாட்சிபுர அக்ரஹாரத்திலிருந்து ஸ்கூலுக்குக் கிளம்பினால் சிம்மக்கல் போவதற்குள் வழியில் இருந்தது ஒரு பெயிண்டிங் ஷாப். எல்லாவித பெயிண்டிங் வேலைகளும் செய்து தரும் ஒரு கடை. அங்கு ஒருவன் படம் வரைந்து கொண்டிருப்பான். சிம்மக்கல் ரவிவர்மா அவன். எண்ணெய் வர்ணங்களில் சித்திரங்களும் வரைந்து தருவான். நிறைய பிரஷ்களும் முழுச் சித்திரங்களும் பாதி வரைந்த படங்களுமாகத் தரையில் சுவரோரமாக சாத்தி வைக்கப்பட்டிருக்கும். நான் அந்த வழியாகக் கடக்கும்போது அவன் வரைந்து கொண்டிருந்தால் நான் அங்கேயே கடையோரமாக நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். அவன் என்னை ஒன்றும் சொல்ல மாட்டான். "என்ன தம்பி, ஆசையா இருக்கா? உனக்கு வரையத் தெரியுமா?" என்று லேசாகச் சிரித்துக் கொண்டே பேசுவான். "பென்சிலாலே தான் படம் போடுவேன். பாத்து காப்பி பண்ணுவேன்" என்று ஒரு நாள் சொன்னேன். " அது போதும். அப்படியே பழகிட்டு வா" என்றான். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டிடம் சர்டிஃபிகேட் வாங்கிவிட்ட சந்தோஷம். என் கிளாஸில் வேறு யாருக்கும் கிடைக்காதது எனக்குக் கிடைத்து விட்டதே.

என் வகுப்பில் கே.டி.கே. தங்கமணியை யாருக்குத் தெரியும்? அவர் வீடே எனக்குத் தெரியுமே! மோஹன் குமாரமங்கலத்தை, பி.ராமமூர்த்தியை, சசிவர்ணத் தேவரை யாருக்குத் தெரியும்? அவர்கள் பேசும் கூட்டத்திற்கு யார் போயிருக்கிறார்கள்? என் கிளாஸில்? மாமி வீட்டில் தான் யாருக்கு இதில் அக்கறை? யார் அருணா ஆசஃப் அலி பேசுவதைக் கேட்க தல்லா குளம் ஓடுவார்கள்? யாருக்கு நவராத்திரி என்றால் ஒன்பது நாட்களும் மதுரையில் உள்ள கோவில்களுக்கெல்லாம் போய் அலங்காரங்களைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும்? அதிகம் போனால் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதைப் பார்க்கப் போவார்கள்.

ஒரு நாள் தேவி டாக்கீஸ் என்று நினைக்கிறேன். பருத்திக்காரத் தெருவோ என்னவோ. சரியாக ஞாபகமில்லை. அங்கு தேவி பால வினோத நாடக சபா என்றும் ஒரு போர்டு இருந்தது. சினிமாக் கொட்டகையில் ஏன் நாடக சபா என்று போர்டு வைத்திருக்கிறார்கள் என்று யோசனை போயிற்று. ஆனால் பின்னாட்களில் படித்ததிலும் மதுரையில் நாடக சபா ஏதும் இப்படிப் பெயரில் இருந்ததாகப் படிக்கவில்லை. இருந்திருக்கக் கூடும். கும்பகோணத்திலும் கூட, தினம் பாணாதுரை ஹைஸ்கூலுக்குப் போகும் ஒரு வழியில், விஜய லக்ஷ்மி டாக்கீஸ் என்று வெளியில் கேட்டுக்கு மேலே இருந்த வளைவில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் உள்ளே கட்டட வாசலில் மேலே வாணி விலாச சபா என்றும் எழுதப்பட்டிருக்கும். இதை நான் ஆச்சரியத்துடன் பார்த்ததுண்டு. யாரைக் கேட்டேன் என்பது நினைவில் இல்லை. அங்கு முன்னால் ஒரு நாடக சபை இருந்தது என்று சொன்னார்கள்.

Search for in Sify 
>> More News

Print | Mail | Post your comments | Rate this Feature 

World Cup Headlines : World Cup Interviews | World Cup Match Schedule | Wish India | India at the Cup
World Cup Past Finals : World Cup Final 1975 | World Cup Final 1979 | World Cup Final 1983 | World Cup Final 1987 | World Cup Final 1992 | World Cup Final 1996 | World Cup Final 1999 | World Cup Final 2003
World Cup Squad : India | Australia | New Zealand | Sri Lanka | South Africa | Pakistan | West Indies | England | Bangladesh | Zimbabwe | Kenya | Canada | Ireland | Netherlands | Scotland | Bermuda
World Cup Stats : World Cup Top Batsman and Bowlers | World Cup Top wicket takers | Team Records | Most Matches | Most wickets | Fastest century | Most runs getters | Fastest fifty | World Cup finals
World Cup Venues : Barbados | St Lucia | Jamaica | St Vincent | Grenada | Guyana | Antigua | Trinidad | St. Kitts

 
Copyright Sify Ltd, 1998-2006. All rights reserved. India News Portal, Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet Data Centre.
Site optimized for Internet Explorer 5.5 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify | About Us | Feedback | Advertise with us | Site Map